• Mar 29 2024

நயன்தாரா நோ சொன்னதால் த்ரிஷா பக்கம் திரும்பிய விக்னேஷ்சிவன்- அஜித்துடன் நடிக்க மறுத்து விட்டாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித் தற்பொழுது துணிவு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் முடிவடைந்ததோடு டப்பிங்பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் அஜித் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படமும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை அடுத்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62 படத்தில் நடிக்கவுள்ளார் என உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.


இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே த்ரிஷா அஜித்துடன் கிரீடம்,  என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் நயன்தாரா நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement