நயன்தாரா இல்லாமால் தனியான பொங்கலைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன்- அதுவும் எங்கு தெரியுமா?

279

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு சிறந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா . இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துப் பிரபல்யமானவர். மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர் தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது அவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தப்படத்தில் இவருடன் விஜய்சேதுபதி மற்றும் சமந்தாவும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புக்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

மேலும் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனைக் காதலித்து வருகின்றார். சிலகாலம் அமைதி காத்த இருவரும் தாங்கள் காதலித்து வருவதை செல்ஃபி புகைப்படங்கள் மூலமாக உறுதிப்படுத்தினார்கள்.

சமீபத்தில் 2022ஆம் ஆண்டு புத்தாண்டை துபாயில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கொண்டாடினார்கள். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணைய தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை நயன்தாரா இல்லாமல் தனியாக கொண்டாடியுள்ளார் விக்னேஷ் சிவன்.

அதாவது தற்போது சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் முன்பு வேட்டி சட்டை அணிந்தபடி விக்னேஷ் சிவன் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்துடன் பொங்கல் வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: