• Jan 27 2023

விஜய் ஒரு ஆம்பள ஷகீலா... முக்கிய நபரின் பரபரப்புப் பேட்டி... தீயாய் பரவும் வீடியோ..!

Listen News!
Prema / 4 weeks ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் ரசிகர்களைக் கொண்ட ஒரு முன்னணிக் ஹீரோ என்றால் அது நம்ம விஜய் தான். எப்போதுமே சினிமாவில் ஆக்டிவாக இருந்து வருகின்ற இவர் தற்போது சுமார் 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்து முடித்திருக்கின்றார்.


அந்தவகையில் இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இப்படமானது பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. வித்தியாசமான கதையம்சத்தைக் கொண்ட படமாகையால் இப்படத்திற்கு இப்போதிருந்தே எதிர்பார்ப்புக்கள் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன.


அதுமட்டுமல்லாது தற்போது விஜய்யின் படங்களிற்கு அதிகளவில் ரசிகர்கள் குடும்பத்துடன் வருகை தருகின்றனர். ஆனால், ஒரு காலகட்டத்தில் குடும்ப ரசிகர்கள் விஜய் படத்திற்கு வர ரொம்பவே தயங்கினார்கள். ஏனென்றால் படத்தில் எல்லைமீறி பல காட்சிகளில் விஜய் நடித்திருந்தாராம். 

அதாவது ரொமான்ஸ் என்ற பெயரில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள், மற்றும் காதலியின் அம்மாவிற்கு சோப் போட்டு விடும் காட்சியில் கூட விஜய் நடித்திருப்பார். இதனால் விஜய்யுடைய படங்களுக்கு வரவே குடும்ப ரசிகர்கள் சற்றுத் தயங்கி யோசித்தார்கள். 


இந்நிலையில், இந்த விஷயம் குறித்து பேசிய பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி, ஒரு முறை பத்திரிகையில் நடிகர் விஜய் தான் ஆம்பள ஷகீலா என்று எழுதப்பட்டதாக ஓப்பனாக கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement