நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தான் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றது.இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
லியோ படம் வெளியாவதற்கு முன்னாள் தளபதி 68 குறித்த அறிவிப்பை வெளியிடக்கூடாது என்பதற்காக வெங்கட் பிரபு தளபதி 68 குறித்த கேள்விகளை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் தனது அடுத்தப் படமான தளபதி 68 படத்திற்காக லாஸ் எஞ்சலஸ் சென்றிருந்த விஜய் தற்போது சென்னை திரும்பி உள்ளார்.
அந்தவகையில் விஜய் சென்னை விமான நிலையம் வந்து சேந்துள்ள விடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் லியோ படத்தின் இசைவெளியீட்டு நிகழ்ச்சிக்காக தான் விஜய் சென்னை வந்திருக்கலாம் என கூறி வருகின்றனர்.
Thalapathy @actorvijay spotted in Chennai Airport 🔥#Leo
pic.twitter.com/s1ORGUuoha
Listen News!