• Apr 20 2024

நாட்டு நாட்டு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தூதரக அதிகாரிகள்.. மெர்சலான மோடி..வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ராஜமவுலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் 'ஆர்.ஆர்.ஆர்'. இப்படத்தில் ராம்சரணுடன் இணைந்து ஜூனியர் என்.டி.ஆரும் நடித்திருந்தார். இப்படமானது சிறந்த வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக் குவித்தது.

ஆர்.ஆர்.ஆர். படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு அதில் இடம்பெற்ற பாடல்களும் முக்கிய பங்காற்றி இருந்தன. அதிலும் குறிப்பாக 'நாட்டு நாட்டு' என்ற பாடலுக்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. அந்த அளவுக்கு பட்டிதொட்டியெங்கும் பரவி அப்பாடல் பட்டையக் கிளப்பி வருகிறது. 


அதுமட்டுமல்லாது இப்பாடலுக்கு பல விருதுகளும் குவிந்து வருகின்றன. அந்தவகையில் உலகின் இரண்டாவது உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருது இப்பாடலுக்கு கிடைத்திருந்தது. அத்தோடு சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் நாட்டு நாட்டு பாடலுக்கு விருது வழங்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இதனைத் தொடர்ந்து உலகளவில் மிக உயரிய சினிமா விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்காக இறுதி நாமினேஷன் பட்டியலிலும் இப்பாடல் இடம்பெற்று உள்ளது. அந்தவகையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு நிச்சயம் விருது கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் தென் கொரியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றுபவர்கள் ஒன்றாக இணைந்து 'நாட்டு நாட்டு' பாடலுக்கு செம குத்தாட்டம் ஒன்றினைப் போட்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வந்தது. 

கெரிப்பாக டுவிட்டரில் சுமார் 1 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பிரதமர் மோடி தென் கொரிய தூதரக பணியாளர்களின் முயற்சிக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement