• May 29 2023

அச்சு அசல் உலகநாயகனாகவே மாறிய ஆண்... ஆச்சரியத்தில் கமல் ரசிகர்கள்... இணையத்தைக் கலக்கும் வீடியோ..!

Prema / 4 weeks ago

Advertisement

Listen News!

ஆறு வயதில் தொடங்கி தற்போதுவரை சுமார் 220க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகின்றார்.


இவர் தென்னிந்திய மொழித் திரைப்படங்கள் தவிர, இந்தி, வங்க மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார். அத்தோடு சினிமாவைத் தாண்டி அரசியலிலும் தலை சிறந்த நாயகனாக விளங்கி வருகின்றார்.

இவ்வாறு உலக நாயகனாகவும் உச்ச நட்சத்திரமாகவும் விளங்கும் இவருக்கு உலகம் பூராகவும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உண்டு.


அவ்வாறான கமலின் தீவிர ரசிகர் ஒருவர் அச்சு அசல் அப்படியே கமல் ஹாசன் போலவே வேடமிட்டு மாறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement