• Apr 19 2024

வெற்றிமாறனின் மோசமான செயல் ..சினிமா வாய்ப்பின்றி தவித்த சூரி !.நடந்த சம்பவம் என்ன?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருக்கக் கூடியவர் தான் வெற்றிமாறன். சினிமா துறையில் இவரின் படங்களுக்கு என்றே தனி மவுசு உள்ளது. அந்த அளவிற்கு இவரின் படங்கள் ரசிகர்களின் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இவ்வாறாக ஒரு படத்திற்காக மட்டும் சூரியை பல வருடங்களாக ஏமாற்றி இருக்கிறார்.

தற்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள படம் விடுதலை. ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன்பே சூரியிடம் வெற்றிமாறன் ஒரு சத்தியம் செய்து இருக்கிறார். அதில் உங்களுக்காக நான் ஒரு கதை தயார் செய்து வைத்துள்ளேன். அதில் நீங்கள் தான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று வேண்டுகோளையும் வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநரிடம் படத்திற்கான கதையை கேட்ட சூரிக்கு படத்தின் கதை மிகவும் பிடித்து போனது. அதிலும் காமெடியனாக வலம் வந்த இவர் ஹீரோவாக பிரமோஷன் ஆக போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்திருக்கிறார். இதற்காக பல வருடங்களாக காத்துக்கொண்டிருந்தார்.

ஆனால் இயக்குநரோ சூரியிடம் கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டு அசுரன் படம் எடுப்பதில் பிஸியாகிவிட்டார். இத்தனை வருடங்களாக காத்துக் கிடந்த சூரி தற்பொழுது அதற்கான பலனை அனுபவித்து வருகிறார். 

இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் விடுதலை திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.



மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் இத்தனை வருடங்களாக காத்துக் கிடந்த சூரிக்கு ட்ரைலரே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படம் கண்டிப்பாக சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து விடும் என்று அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement