• Apr 25 2024

போன வருடமே விஜய்க்கு கதை சொல்லி கமிட் ஆன வெங்கட் பிரபு..தளபதி 68 பற்றி வெளியான செம்ம ரகசியம்

stella / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய்யின்  67-வது லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கிறார். மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாகிக் கொண்டு தான் இருக்கின்றன.


இந்்த நிலையில் இன்று நடிகர் விஜய்யின் 68-வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு, இயக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிகில் படத்தினை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் இந்த புதிய படத்தினை தயாரிக்க உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். 


இந்த படம் தொடர்பான அறிவிப்பில் “என் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி விஜய் அண்ணா. இந்த போட்டோவை அறிவிப்புக்கு பிறகு தான் வெளியிடுவேன் என்ற சத்தியத்தை காப்பாற்றி உள்ளேன். 10 மாதங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தை பகிர்கிறேன். கனவு மெய்யாகி உள்ளது.” என வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement

Advertisement