• Apr 20 2024

வாரிசு Trailer -அ தாண்டி உள்ள இருக்குற சீக்ரெட்ஸ்.. உண்மையை உடைத்த வம்சி.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக 'வாரிசு' திரைப்படம் வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை 11.01.2023 அன்று திரை அரங்குகளில் வெளியாக உள்ளது.

வாரிசு திரைப்படத்தை இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள்.

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக ஜோடியாக நடித்துள்ளார்.மேலும் இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

எனினும் சமீபத்தில்  வெளியான வாரிசு பட டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளதால், ரசிகர்களும் இந்த திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில்  இப்படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில், “நான் ஒரு க்ளவர் செல்லர். ட்ரெய்லரை தாண்டி படத்தில் நிறையவே இருக்கிறது. அதெல்லாம் சீக்ரெட்ஸ். என் வேலை என்னவென்றால் படத்தில் என்ன வைத்துள்ளேனோ அது டிரெய்லரில் வரவேண்டும். இரண்டரை மணி நேர படத்தில் வருவதை மொத்தமாக ட்ரெய்லரில் சொல்ல முடியாது.

ஆனால் படத்தின் உள்ளடக்கம் என்ன என்பதை ட்ரெய்லரை பார்த்து புரிந்துகொண்டு ஆடியன்ஸ் மனதளவில் தயாராகி படத்துக்கு வரவேண்டும்.மேலும்  அவர்கள் ஏதோ ஒன்று நினைத்துவிட்டு, படத்தில் வேறொன்றை பார்த்து ஏமாறக் கூடாது.

ஆனால் அதே சமயம் டிரெய்லரை விடவும் வேறு சுவாரஸ்யமான கதை, எமோஷன்ஸ், டிராமா எல்லாமே அப்பா, அம்மா, குடும்பம், சகோதர உறவுகளை நினைவூட்டும். மேலும் அதைதான் வாரிசு செய்யப்போகிறது. எமோஷன், ஹீரொயிக், கேரக்டர், காமெடி, எண்டர்டெயின்மெண்ட், மியூசிக் என எல்லாமே வேறலெவலில் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement