• Apr 25 2024

வாரிசு பட வெற்றி.. சக்ஸஸ் மீட் எங்கு நடந்தது தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவுட் திரையுலகில், உச்சகட்ட நட்சத்திரங்களாக இருக்கும் அஜித் - விஜய் ஆகிய இருவரது நடிப்பிலும் கடந்த 11ம் திகதி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்ற திரைப்படம் தான் வாரிசு - துணிவு.இப்படங்கள் இரண்டிற்கும் ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.

அதாவது அஜித்தின் துணிவு படத்துடன் மோதினாலும் எதிர்பார்த்த அளவுக்கு வாரிசு படத்திற்கு பாக்ஸ் ஆபிசில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. 

எனினும் தற்போது 100 கோடியை தாண்டி வசூலித்து உள்ளது.தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து இருக்கிறது.

இவ்வாறுஇருக்கையில் நேற்று வாரிசு வெற்றியை கொண்டாடும் சக்ஸஸ் பார்ட்டி நடந்து முடிந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

சென்னை ECRல் இருக்கும் ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் தான் சக்ஸஸ் பார்ட்டி நடைபெற்று இருக்கிறது. அதில் விஜய் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டு இருக்கின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement