• Apr 20 2024

அவ புருஷனை இவ வச்சிக்கிட்டு இருந்தால் தான் பர்சனல் வெஞ்சன்ஸ்-தனலட்சுமி கேம் குறித்து பேசிய வனிதா!

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆனது ஆரம்பிக்கப்பட்டு சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக இந்த வாரம் முழுவதும் அசீம் மற்றும் தனலக்ஷ்மிக்கு இடையில் மோதல் அதிகமாக இருந்தது.இது குறித்து பிக்பாஸ் சீசன் 3 இன் போட்டியாளரான வனிதா சில விஷயங்களை விமர்சித்துள்ளார்.

அதாவது தனலக்ஷ்மி தெளிவாக தன்னுடைய கேமை விளையாடி வருகிறார். இதில் அவர் பர்சனல் வெஞ்சன்ஸ் வைத்து விளையாடி வருகிறார் என்று சொல்வது எல்லாம் சுத்த வேடிக்கையாக உள்ளது. அசீம் தனலக்ஷ்மி பர்சனல் வெஞ்சன்ஸ் வைத்து விளையாடி வருகிறார் என சில முறை குற்றம்சாட்டிய நிலையில், எழுந்த விவாதத்தில் வனிதா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


மேலும் தனலக்ஷ்மி சுத்த ப்ரொபஷனலாகவே தனது கேமை விளையாடி வருகிறார் என்றும் அவ புருஷனை இவ வச்சிக்கிட்டு, இவ புருஷனை அவ வச்சிக்கிட்டாத்தான் சொந்த பகையெல்லாம் வரும்.. இது ஜஸ்ட் கேம்.. மற்ற போட்டியாளர்களை விட தனலட்சுமி நல்லா போல்டா தனது கேமை விளையாடி வருகிறார் என வனிதா விஜயகுமார் தனது ஸ்டைலில் தடாலடியாக கூறியுள்ளார்.

சில போட்டியாளர்களை பார்த்தாலே புடிக்க மாட்டேங்குது, ஆயிஷா, ஷெரினாவை விட தனலட்சுமி இந்த பிக் பாஸ் வீட்டில் ஸ்ட்ராங் போட்டியாளராகவே திகழ்கிறார். கண்டிப்பாக கடைசி வரை அவர் தனது கேமை விளையாடி விட்டு செல்வார் என தெரிகிறது என வனிதா விஜயகுமார் பாராட்டி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement