5வது கணவனின் புகைப்படத்தை இன்ராகிராமில் பதிவிட்ட வனிதா

70936

தமிழ் சினிமாவில் சிறந்த தந்தை கதாப்பாத்திரத்தை ஏற்று நடிக்கக் கூடிய நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜயகுமார். மற்றும் இவரது மனைவி மற்றும் பிள்ளைகளும் சிறந்த நடிகர்கள் என்பது யாவரும் அறிந்ததே.

மேலும் இவரது மூத்த மகளான வனிதா நடிகர் விஜய்யின் படத்திலேயே கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புக்கள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார்.

மேலும் இவரது குடும்ப வாழ்க்கையில் பலகுழப்பங்கள் ஏற்பட்டதாலும் பல திருமணங்கள் புரிந்ததாலும் இவரது மதிப்பு குறைந்தது. இந்த நிலையில் தமிழில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்குபற்றினார்.பிக்பாஸ் வீட்டில் இவர் உண்டாக்கிய குழறுபடிகளாலும் சண்டைகளாலும் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகின்றார்.

தற்பொழுது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.மேலும் 4 திருமணங்கள் செய்தாலும் நான்கு பேரையும் விட்டு விலகியிருக்கிறார். இந்நிலையில் சின்னத்திரை நடிகர் ஒருவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள் இவர்தான் வனிதாவின் 5வது கணவரா? எனச் சந்தேகித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.