நடிகர் சூர்யாவின் நடிப்பில் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் "வணங்காண்" . இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே ரிலீஸ் ஆகி இருந்த நிலையில் தற்போது அதன் பெஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் பாலவின் தயாரிப்பில் திரைக்கு வரவிருக்கும் "வணக்கான்" திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடிகை கிருத்தி ஷெட்டி அவர்களும் நடித்துள்ளார். அத்தோடு நடிகர் அருண்விஜய் மற்றும் ரோஷ்ணி பிரகாஷ் ஆரோகியோரும் நடித்துள்ளனர்.
இத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசையமைக்கிறார் மேலும் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பை முறையே பாலசுப்ரமணியம் மற்றும் சதீஷ் சூர்யா ஆகியோர் செய்கின்றனர். படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்போது அத்திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் அருண் விஜய் அவர்களின் பெஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
அதில் அவர் உடல் முழுவதும் களிமண் பூசிய நிலையில் கையில் இரண்டு சிலை வைத்துக்கொண்டு மேலே பார்ப்பது போன்று மிரட்டலாக போஸ் கொடுக்கிறார். இத்திரைப்படத்தில் எந்த கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார், இவரின் நடிப்பு எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் மேலும் இத்திரைப்படமானது எதிர்வரும் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!