• Mar 29 2023

வைரமுத்துவின் தாய்மொழித் திருநாள் வாழ்த்து... கவிதையால் அலங்கரித்தார்...

ammu / 1 month ago

Advertisement

Listen News!

வைரமுத்து அவர்கள் மாபெரும் கவிஞர் என்பது யாருக்கும் தெரியாத விடயமல்ல. ஒவ்வொரு நிகழ்விற்கு அவர் அந்த நிகழ்வை கவிதையாக அலங்கரிப்பார். 


அந்த வகையில் இன்று உலக தாய்மொழி திருநாள் ஆகும். இந்த நாளை நினைவு கூறும் வகையில் அவர் ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை வரைந்துள்ளார். 


"எழுத்தும் நீயே சொல்லும் நீயே பொருளும் நீயே பொற்றமிழ்த் தாயே... அகமும் நீயே புறமும் நீயே முகமும் நீயே முத்தமிழ்த் தாயே.. மாறும் உலகில் மாறாதியங்கும் மாட்சி படைத்தனை நீயே உனக்கு வணக்கம் தாயே - எம்மை உலக மாந்தராய் உய்யச் செய்வாயே.."


இவ்வாறு அவரின் கவிதை அமைந்துள்ளது. அவர் ஒரு பெரிய தமிழ் பக்தர் ஆவார். அனைவர்க்கும் தாய்மொழி திருநாள் வாழ்த்துக்கள் என்றவாறு அவரின் வாழ்த்து இருந்தது.


Advertisement

Advertisement

Advertisement