• Jun 04 2023

சொன்னபடியே மாணவி நந்தினிக்கு தங்கப் பேனாவை வழங்கிய வைரமுத்து... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

நேற்று முன்தினம் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் திண்டுக்கல்லை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 மார்க்குகள் பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.அவருக்கு ஏராளமான பிரபலங்களும் வாழ்த்து கூறி இருந்தனர்.


அந்தவகையில் கவிஞர் வைரமுத்து நந்தினிக்கு ஒரு தங்க பேனாவை பரிசாக தருவதாக அறிவித்து இருக்கிறார். அதாவது "அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 


இந்நிலையில் கூறியபடி திண்டுக்கல்லுக்கு சென்ற கவிஞர் வைரமுத்து, அங்கு பொன்சீனிவாசன் தெருவில் உள்ள மாணவி நந்தினியின் இல்லத்திற்கு சர்ப்ரைஸாக சென்று தங்கப்பேனாவை பரிசாக வழங்கி இருக்கின்றார். இவ்வாறு போன வைரமுத்துவின் திடீர் வருகையால் மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் மூழ்கி உள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement