வடிவேலுக்கு சொந்தமான ரூ.5 கோடி நிலம் மீட்பு ;விரைந்து வந்த அதிகாரிகள்-மீண்டும் சர்ச்சையா?

187

உலகலாவிய ரீதியில் காமெடிக்கு என்று பெயர் போனவர் தான் நடிகர் வடிவேலு.இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு இடையில் நடிக்காவிட்டாலும் இவருடைய மீம்ஸ் களாலே இவரின் ரசிகர்கள் இவரை ரசித்தார்கள்.பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் அவர் மீதான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார் வடிவேலு.

இந்த நிலையில் மறுபடியும் சிக்கலில் சிக்கி உள்ளார்.அதாவது வடிவேலுவின் பாரம்பரிய நிலம் ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு இருந்ததாகவும் அதனை தற்போது மீதுலதாவும் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காட்டுப்பரமக்குடி கிராமத்தில் திருவேட்டுடைய அய்யனார் கோவில் உள்ளது. இது நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா சேத்தூர் கிராமத்தில் உள்ளது. அந்த நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.

தற்போது அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் பரமக்குடி உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில் ஆய்வாளர் முருகானந்தம், சேத்தூர் கிராம கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர் ஆகியோர்எடுத்த நடவடிக்கை மூலம் , அவர்களது முன்னிலையில் கோவில் நிலம் மீட்கப்பட்டது.

அத்துடன் அந்த இடத்தில் இந்து சமய அறநிலைய துறையின் சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டு இருப்பதாகவும், மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.5 கோடி எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.