சிவகார்த்திகேயன் ஆசையை நிறைவேற்றாத வடிவேலு- குழப்பத்தில் படக்குழு

923

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியாகியிருந்த பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது தெரிந்ததே. அந்த வகையில் தற்பொழுது டான் திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்பதும் தெரிந்ததே.

மேலும் இவர் இயக்குனர் நெல்சன் தயாரித்த டாக்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருடன் தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தின் மூலம் பிரபலமான பிரியங்கா மோகன் நடித்திருப்பதோடு இப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து எஸ் கே புரோடக்சன் தயாரித்திருந்தது. இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வந்தது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இப்போது டான் மற்றும் அயலான் ஆகிய படங்களை நடித்து முடித்து வைத்துள்ளார். இதையடுத்து அவர் அட்லி உதவியாளர் அசோக்குமார் என்பவர் இயக்கும் சிங்கப்பாதை என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் வேலைகள் பெப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த சொல்லி இயக்குனரிடம் சிவகார்த்திகேயன் கூறினாராம். ஆனால் வடிவேலு நாய் சேகர் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருவதால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டாராம். அதே போல இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிருத்விராஜிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்பட்டதும், வதந்தி என்று தெரியவந்துள்ளது.