• Apr 01 2023

குலதெய்வம் கோவில் வாசலில் நின்று சுவாமி தரிசனம் செய்த வடிவேலு

Jo / 1 month ago

Advertisement

Listen News!

சிவபெருமானின் மஹா சிவராத்திரியான நேற்று , நாடு முழுவதும்  கொண்டாடப்பட்டது,இந்த மங்களகரமான நாளில், தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் ஆலயங்களுக்குச் சென்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள்,வீடியோக்கள் என்பன வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.

அந்தவகையில் ,திரைப்பட பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மகாசிவராத்திரி முன்னிட்டு பரமக்குடியில் இருக்கின்ற தன்னுடைய ஐய்யனார் குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் பண்ணினார் .

சமீபத்தில்  அவருடைய தாயார் காலமாக இருந்த நிலையில் கோவிலுக்குள் வராமல்  கோவிலின் வாசலில் நின்று கடவுள் தரிசனம் செய்திருக்கிறார் .

அப்பொழுது கோவிலுக்கு வந்த பக்தர்களும், ஊர் மக்களும் ஆர்வத்துடன் ஓடி வந்து அவரின் பக்கத்தில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள் .

இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பதிவாகி இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement