• Apr 20 2024

வடிவேலு கன்னத்தில் ஓங்கி அடித்த ராதிகா- பதறிப்போன பிரபல நடிகர்-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசுவின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் சந்திரமுகி 2. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.இப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் மைசூரில் நடந்தது.

இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கின்றார்.ஹாரர் திரில்லர் ஜானரில் இப்படம் உருவாகி வருவதோடு ‘வைகை புயல்’ வடிவேலுவும் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்த படத்தின் கதாநாயகியாக குச்சுப்புடி நடன கலைஞரான லட்சுமி மேனன் நடித்து வருகின்றார். இப்படத்தில் நடிகை ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் அடுத்த மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

ராகவா லாரன்ஸ், வடிவேலு உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை இந்த ஆண்டு இறுதியில் இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையொட்டி ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் ராதிகா. அந்த வீடியோவில் நடிகர் வடிவேலுவின் கன்னத்தில் லாரன்ஸும், ராதிகாவும் குத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இதில் லாரன்ஸ் மெதுவாக குத்தினாலும், ராதிகா சற்று ஓங்கி குத்தி விடுகிறார். இதைப்பார்த்த லாரன்ஸ் செம்ம அடி அடிச்சுட்டாங்க என சொல்ல, இதற்கு வடிவேலு கொடுத்த எக்ஸ்பிரஷன் தான் அல்டிமேட். இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement