முக்கிய இயக்குனர் மற்றும் நடிகரின் படத்தில் வடிவேலு… வெளியான சூப்பர் தகவல்..!

133

தமிழ் சினிமாவில் என்றும் யாராலும் இலகுவாக மறக்கமுடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு.

இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்தவர் கூட.அத்தோடு சில ஆண்டுகளாக வடிவேலு நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலத்திலும் அனைவரின் மனதிலும் வாழ்ந்தவர் என்று தான் கூற வேண்டும்.இப்போது அந்தத் தடைகள் யாவும் நீக்கப்பட்டுள்ளன.

வடிவேலு தற்பொழுது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும்’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்னும் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடத்தே வைரலானது.

மேலும் தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தில் வடிவேலுவை நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இது குறித்த அறிவிப்பும் டிசம்பர் மாதம் வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.