• Apr 01 2023

19 வயது நடிகையை கட்டி அணைத்து சர்ச்சையில் சிக்கிய வடிவேலு..தீயாய் பரவும் புகைப்படம்!

Jo / 4 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த வடிவேலு தற்போது ரீ என்ட்ரியில் கலக்கி கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் ஹீரோவாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து வடிவேலுவின் நடிப்பில் அடுத்ததாக மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது.

அதில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து ரசிகர்கள் பட ரிலீசை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இணையதளத்தில் வடிவேலு இளம் நடிகை ஒருவரை கட்டி அணைத்த படி இருக்கும் புகைப்படம் ஒன்று தீயாக பரவி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்து தற்போது சீரியல் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் ரவீணா சமீபத்தில் வடிவேலுவை சந்தித்திருக்கிறார். அப்போது அவரை பார்த்த மகிழ்ச்சியில் ரவீணா அவருடன் இணைந்து புகைப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.

அப்போது தான் வடிவேலு அவரின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சி, அணைத்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார். இதுதான் தற்போது மீடியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த போட்டோவை பார்த்த பலரும் ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது, பொது இடத்தில் இப்படித்தான் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்களா என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரவீனா பெரிய திரையிலும் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 

இவருக்கு தற்போது 19 வயது ஆகிறது. அது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய டான்ஸ் வீடியோவை அவ்வப்போது வெளியிட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் அவர் தற்போது வடிவேலுவுடன் இணைந்து எடுத்துக் கொண்ட இந்த போட்டோவையும் வெளியிட்டுள்ளார். இதுதான் தற்போது சில விமர்சனங்களை பெற்று பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் நடிகர் வடிவேலுவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தது சர்ச்சையான நிலையில் தற்போது இந்த சம்பவத்திலும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement