• Apr 20 2024

யோகி பாபுவின் மார்க்கெட்டை இறக்க சதி திட்டம் போட்ட வடிவேல்- சைலண்டாக நடந்த வேலைகள் இவைகள் தானா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஒரு நடிகர் யோகி பாபுவின் மார்க்கெட்டை இறக்குவதற்காக சில வேலைகளை மறைமுகமாக செய்து வருகிறாராம் எனும் தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஆரம்ப காலகட்டத்தில் கூட்டத்தில் ஒருவராக நடித்து வந்த யோகி பாபு இன்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு காமெடி நடிகராக உருவெடுத்துள்ளார். அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திலும் காமெடியனாக கலக்கி வரும் இவர் கதையின் நாயகனாகவும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பட்டையை கிளப்பி உள்ளார். அதிலும் இவர் கதாநாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம் மிகப் பெரும் வரவேற்பை பெற்றது.

எனினும் அதைத்தொடர்ந்து இவர் தற்போது நிற்க கூட நேரமில்லாமல் படு பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது வாரிசு, ஜெயிலர் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அதில் சில திரைப்படங்கள் ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கிறது. இவ்வாறு அவருடைய மார்க்கெட் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.

இதனால் ஒரு காலத்தில் நடிப்பில் பட்டையை கிளப்பிய பல நடிகர்களுக்கு வாய்ப்புகள் வருவது குறைந்து வருகின்றது. அதிலும் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் வடிவேலு யோகி பாபுவால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். ஏனென்றால் மீண்டும் நடிக்க வந்திருக்கும் அவருக்கு வாய்ப்புகள் குவியுமென்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அனைத்து பட வாய்ப்புகளும் யோகி பாபுவுக்கு செல்கிறதாம்.

இதனால் வடிவேலு யோகி பாபுவின் மார்க்கெட்டை இறக்குவதற்காக சில வேலைகளை மறைமுகமாக செய்து வருகிறாராம். எனினும் அதன்படி சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் யோகி பாபு குறித்து சர்ச்சையான விஷயங்கள் பேசப்பட்டது. மேலும் தாதா என்ற திரைப்படத்தில் நான் நாலு சீனில் மட்டும்தான் நடித்திருக்கிறேன் என்று யோகி பாபு கூறினார்.ஆனால் அவர் படம் முழுவதும் வரும்படி அதிக காட்சிகளில் நடித்திருப்பதாக இயக்குனர் கூறி வருகிறார்.

இப்படியாக யோகி பாபுவின் மேல் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அவர் கால்சூட் போன்ற விஷயங்களில் சொதப்பி வருவதாகவும் ஒரு தகவல் பரவுகிறது. மேலும் இப்படி அவரைச் சுற்றி வரும் இந்த சர்ச்சைகளுக்கு பின்னால் வடிவேலு தான் இருக்கிறாராம். அவருடைய பேச்சை கேட்டு தான் சிலர் இப்படி செய்கிறார்கள் என்றும் சொல்லப்படுகின்றது.

யோகி பாபுவின் மார்க்கெட் இறங்கினால் தான் வடிவேலுவுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நிலை இப்போது இருக்கிறது. ஏனென்றால் வடிவேலுக்கு அடுத்தபடியாக யோகி பாபு வளர்ந்து விட்டார் என்ற பேச்சுகள் வெளிப்படையாகவே கிளம்பியுள்ளது. இதை தாங்க முடியாததால் தான் அவர் சைலன்டாக பல வேலைகளை பார்த்து வருவதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement