• Apr 19 2024

முதல் நாளை விட அடுத்தடுத்த நாட்களில் வசூலில் பட்டையை கிளப்பும் வாத்தி!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற 'திருச்சிற்றம்பலம்' படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது.


தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவந்த இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்த வண்ணமே இருக்கின்றனர்.


அந்தவகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்தத் தகவலின் படி இப்படம் மூன்று நாட்கள் முடிவில் ரூ. 43 கோடிக்கும் மேல் வசூல் செய்து பட்டையை கிளப்பியுள்ளது. 


இவ்வாறாக முதல் நாளை விட இரண்டாம், மூன்றாம் நாட்களில் 'வாத்தி' படம் அதிகளவில் வசூல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது எதிர்வரும் நாட்களில் வாத்தி படத்தின் வசூல் மேலும் பல கோடிகளால் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement