• Apr 19 2024

அமோக வசூலில் 'வாத்தி'.. வெறும் 10நாட்களில் பல கோடியைக் கடந்தது.. அப்போ 100 கோடியைத் தாண்டி விட்டதா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற 'திருச்சிற்றம்பலம்' படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது.


தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவந்த இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பதிவு செய்த வண்ணமே இருக்கின்றனர்.


அந்தவகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படமானது தற்போது 10 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி, உலகளவில் 'வாத்தி' படமானது 10 நாட்களில்  ரூ. 80 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. எனவே இப்படமானது விரைவில் ரூ. 100 கோடியை எட்டுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement