• Sep 25 2023

அடேங்கப்பா..ஜெயிலர்.. இதுவரை இத்தனை கோடி வசூலா? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தான் ஜெயிலர்.


இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் வசூலில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை பின்னுக்கு தள்ளி வருகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.



இப்படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில், ஜெயிலர் வெளிவந்த 9 நாட்கள் முடிக்கு வந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 440 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இனி வரும் நாட்களில் கண்டிப்பாக ரூ. 500 கோடியை கடந்து வசூலில் இமாலய உச்சத்தை தொடும் என கூறப்படுகிறது.


தமிழ்நாட்டில் மட்டும் 170 கோடி ரூபாய் வரையும், தமிழ்நாடு உட்பட இந்திய முழுவதும் 230 முதல் 250 கோடி வரையும் கலெக்‌ஷன் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவுக்குப் பிறகு அமெரிக்காவில் தான் அதிகம் வசூல் எனக் கூறப்படுகிறது. அதன்படி, இதுவரை 5 மில்லியன் டாலர் வரை வசூல் செய்துள்ளதாம். விக்ரம், பொன்னியின் செல்வன் படங்களின் முதல் வாரம் வசூல் சாதனையை ஜெயிலர் முறியடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

Advertisement

Advertisement