‘சாணிக்காகிதம்’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்

167

தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறக்கும் நாயகிகளில் முக்கியமானவர் கீர்த்திசுரேஸ் இவரது நடிப்பில் உருவான ‘சாணிக்காகிதம்’ என்ற படத்தின் படபிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.

தற்போது படக்குழுவினர் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் ‘சாணிக்காகிதம்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கீர்த்தி சுரேஸ் நடிப்பில் வெளியான ஒரு சில படங்கள் ஓடிடியில் வெளியாகியிருந்த நிலையில் வருகிற நவம்பர் மாதம் அமேசானில் ‘சாணிக்காகிதம்’ திரைப்படம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது . ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.