நடிகை ஷாலினி மற்றும் ஷாமிலி ஆகியோரின் யாரும் பார்த்திடாத சிறுவயதுப் போட்டோ

188

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்.அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் ஹிட்டடித்தது என்பதும் தற்பொழுது நடிகர் அஜித் வலிமை என்னும் படத்தில் நடித்து வருவதும் தெரிந்ததே.அத்தோடு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அஜித், நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும்அனுஷ்கா குமார், மற்றும் ஆத்விக் குமார் என இரு பிள்ளைகள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.அத்தோடு இவர்கள் இன்றும் பலரால் பேசப்படும் காதல் ஜோடிகளாகவும் விளங்குகின்றனர்.

மேலும் நடிகை ஷாலினிக்கு, ரிச்சர்ட் மற்றும் ஷாமிலி என சகோதரர் மற்றும் சகோதரி உள்ளனர்.இதில் ஷாலினியின் தங்கை ஷாமிலி தமிழில் வெளியான அஞ்சலி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர்.அத்தோடு துர்கா படத்திலும் சிறப்பாக நடித்து இருந்தார்.

இதன்பின் பல ஆண்டுகள் கழித்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீரசிவாஜி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.இந்நிலையில் ஷாலினி மற்றும் ஷாமிலி இருவரும் இணைந்து சிறு வயத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் பார்ப்பதற்கு இருவருமே ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: