வெங்கட்பிரபுவுடன் கூட்டணி அமைக்கும் வேலையில்லாப் பட்டதாரி திரைப்பட நடிகை

118

தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பல இயக்குனர்கள் இருக்கின்றனர். இவர்கள் வரிசையில் முக்கியமானவர் தான் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் இயக்கிய பல திரைப்படங்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் சிம்புவை வைத்து மாநாடு என்னும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் நிறைவுபெற்றுள்ளன.

இந்நிலையில் தற்பொழுது மாநாடு படத்தின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இதனைத் தொடர்ந்து இப்போது கிச்சா சுதீப் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் உருவாக்க உள்ளதாக சொல்லப் படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் மேலும் இரண்டு நடிகர்களாக அரவிந்த் சுவாமி மற்றும் பிரபுதேவா ஆகியோரும் நடிக்க உள்ளார்களாம். இந்த படத்துக்கு யுவன் உள்ளிட்ட சில இசையமைப்பாளர்கள் இசைப் பணியை மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் இப்போது மற்றுமொரு முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகை கஜோல் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பிரபுதேவா, அரவிந்த்சுவாமி மற்றும் கஜோல் ஆகியவர்கள் ஏற்கனவே 1997 ஆம் ஆண்டு மின்சாரக் கனவு படத்தில் இணைந்து நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.