• Apr 20 2024

"எழுந்திருக்கக் கூட முடியவில்லை".. நோயால் அவதிப்பட்டு வரும் ஷிவாங்கி.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் ஷிவாங்கி. இதில் தன்னுடைய  குரல் வளத்தினாலும், நகைச்சுவை கலந்த பேச்சினாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். 

இதனையடுத்து இவருக்கு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் மக்களிடத்தில் மென்மேலும் பிரபலமானார். அதுமட்டுமல்லாது இதன் வாயிலாக இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து.


அந்தவகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' படத்தில் ஷிவாங்கி நடித்திருந்தார். மேலும் இவர் வைகைப்புயல் வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' படத்திலும் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது ஷிவாங்கி குக் வித் கோமாளி 4 -வது சீசனில் குக்காக களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் ஷிவாங்கி தற்போது அவரின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். அதாவது அதில் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கின்றமை குறித்துக் கூறியுள்ளார். 


அதன்படி அவரது பதிவில் "ஹலோ, எல்லாரும் எப்படி இருக்கிறீர்கள். எல்லாரும் நன்றாக தான் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் மற்றும் சளியால் அவதிப்பட்டு வருகிறேன். என்னால் எந்திரிக்க கூட முடியவில்லை. உங்களின் அன்பு எனக்கு புத்துணர்ச்சி தருகிறது. உங்கள் அன்பு மட்டும் இல்லையென்றால் நான் இல்லை" என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஷிவாங்கி ரசிகர்கள் அவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் எனக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement