• Mar 29 2024

H.வினோத் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்- கதை சொல்லியாச்சா?- வெளியாகிய சூப்பர் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் H.வினோத்,இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று, அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற வெற்றிப்படங்களை இயக்கினார்.இவரது நடிப்பில் சமீபத்தில் துணிவு என்னும் படத்தை இயக்கியிருந்தார்.

வங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023) அன்று  திரையரங்குகளில் வெளியானது.'துணிவு' படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.


துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது  குறிப்பிடத்தக்கது.மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.

இந்நிலையில் பிரபல சேனலின் H. Vinoth Fans Festival நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது உலகநாயகன் கமல்ஹாசன் உடன் புது படத்தில் இணைவது குறித்த தகவல்களை வினோத் பகிர்ந்துள்ளார்.  இந்த நிகழ்வில் இயக்குநர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனும்  கலந்து கொண்டார். 


அப்போது, "நீங்கள் அடுத்து வினோத் படம் எப்படி இருக்கனும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?" என விஜய் மில்டனிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய் மில்டன்," வினோத், கமல் சார்ட்ட ஒரு கதை சொல்லி படம் பன்றார்னு சொல்லும் போது அது மிக சந்தோஷமான தருணம். அந்த படத்தில் கேமரா மேன் அல்லது உதவி இயக்குநராக வாய்ப்பு கேக்கலாமானு யோசிச்சேன்." என விஜய் மில்டன் கூறினார். 

அப்போது குறுக்கிட்ட வினோத்,"கமல் சார்க்கு இன்னும் நான் கதை சொல்லல சார் " என சிரித்துக் கொண்டே கூறினார். மேலும் பேசிய விஜய் மில்டன், "கமல் - வினோத் காம்பினேஷன் ரொம்ப பிடிச்சிருந்தது. அந்த படம் நடக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட் போய் பார்க்கனும். அந்த படத்தை தியேட்டரில் பார்க்கனும்" என விஜய் மில்டன் பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement