• Apr 18 2024

விக்ரமன் தான் பிடிக்கும் சி.எம் மகன் மாதிரி உதயநிதி இல்லை- பிக்பாஸ் ஆரவ்-இன் வைரலாகும் பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது 6வது சீசனில் காலடி எடுத்துவைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 1 இல் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் ஆரவ்.

அதாவது இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனதோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது. பிக்பாஸ் முடிந்ததை அடுத்து மாக்கெட் ராஜா என்னும் படத்தில் நடித்திருந்தார். இருப்பினும் அப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்தார்.


இதனை அடுத்து தற்பொழுது உதயநிதி ஸ்டானின் நடிப்பில் உருவாகியுள்ள கலகத் தலைவன் திரைப்படத்தில் ஸ்மாட் வில்லனாக நடித்துள்ளார்.எனவே இப்படத்தினை ப்ரமோட் செய்யும் விதமாக அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த வகையில் அதில் அவர் கலந்து கொண்டு கூறியதாவது.

நான் என்னோட பிக்பாஸிற்குப் பிறகு எந்த சீசனையும் நான் பார்த்ததில்லை. ஆனால் தற்பொழுது 6வது சீசனைப் பார்த்திட்டு வருகின்றேன். இந்த சீசன்ல எனக்கு பிடிச்சது என்றால் விக்ரமன் தான். அவரை எனக்கு விஜோக இருக்கும் போதே நன்றாகத் தெரியும.அதோட அவருடைய பேச்சு எல்லாமே உண்மையாக இருக்கு அதனால எனக்கு அவரை பிடிச்சிக்கு என்று கூறினார்.


தொடர்ந்து கலகத் தலைவன் படத்தில் கதாநாயகனாக நடித்த உதயநிதி பற்றியும் கூறினார். அதாவது உதயநிதி சி.எம் மகன் என்ற ஒரு எண்ணம் அவருக்கு இல்லை. படப்பிடிப்புத் தளத்தில அரசியில் சம்மந்தமாக யாரையும் சந்திக்க மாட்டாரு. அதே போல ஷுட்டிங் ஒரு நாள் கூட நடைபெறாவிட்டாலும் கட்சிக்கு போய்டுவார். ரெண்டையும் சரிசமமாக கையாள அவரால் மட்டுமே முடியுது. அவருடைய படத்தில நடிச்சத நினைக்க ரொம்ப பெருமையாகத் தான் இருக்கு. இந்தப் படம் வந்ததற்கு பிறகு தான் நான் அடுத்த படத்தில நடிக்கிறதை பற்றி யோசிப்பேன். அதனால 2 படங்களை அப்படியே நிறுத்தி வச்சிருக்கிறேன். கண்டிப்பாக கலகத் தலைவன் நல்லதொரு அடையாளத்தை பெற்றுத் தரும் என நம்புகின்றேன் எனக் கூறியுள்ளார்.


இது தவிர என்னுடைய வாழ்வில் திருமணம் சீக்கிரமாக பண்ணிக்கிட்டது தான் நான் எடுத்த சரியான முடிவு.ஏன் என்றால் என்னை விட என்னோட மனைவிக்கு என்னோட கெரியரில் ரொம்ப நம்பிக்கை அவங்க சொல்லுவாங்க உனக்கு கண்டிப்பா நல்ல படம் கிடைக்கும் வெயிட் பண்ணு என்று அது மாதிரி தான் எனக்கு கலகத் தலைவன் திரைப்படம் அமைஞ்சிருக்கு என்றும் கூறினார். இது தவிர இன்னும் பல விடயங்களை அதில் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



















Advertisement

Advertisement

Advertisement