• Mar 28 2024

உதயநிதியின் கலகத் தலைவன் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் உதயநிதி முதன்முறையாக நடித்து இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் கலகத் தலைவன்.இப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி விட்டதா? என்று பார்ப்போம்.

அதன்படி கதைக்களமாவது 

ட்ருபேடார் எனும் கார்ப்ரேட் நிறுவனம் அளவான பெட்ரோலில் மைலேஜ் அதிகமாக தரும் வாகனத்தை கண்டுபிடித்து அதனை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகிறது. ஆனால், இந்த வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை அதிகமான காற்று மாசுவை உண்டாக்கும் என்று அதன்பின் தெரியவருகிறது.இந்த விஷயம் வெளியே கசியக்கூடாது என்று ட்ருபேடார் நிறுவனத்தின் உரிமையாளர் இந்த விஷயத்தை தெரிந்தவர்களிடம் கூறுகிறார். ஆனால், எப்படியோ இந்த விஷயம் ட்ருபேடாரின் எதிரி நிறுவனத்திடம் கசிந்து விடுகிறது. இதனால், ட்ருபேடார் அறிமுகம் செய்த இந்த வாகனத்தின் மேல் பல விமர்சனங்களும், ட்ருபேடார் நிறுவனத்தின் ஷேரும் பங்குச்சந்தையில் குறைய துவங்குகிறது.


ஏற்கனவே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ட்ருபேடார் நிறுவனத்திற்கு மேலும் இந்த அடி விழுகிறது. தன்னுடைய போட்டி நிறுவனத்திற்கு இந்த விஷயத்தை கசிய வைத்தது யார் என்று கண்டுபிடிக்க ட்ருபேடார் நிறுவனத்தின் உரிமையாளர் மூலம் நியமனம் செய்யப்படுகிறார் ஆரவ்.அடிமட்டத்தில் இருந்து இதை கொடூரமான முறையில் விசாரித்து ஒவ்வொருவரிடமும் இருந்து பல உண்மைகளை வாங்கி வரும் ஆரவ், இறுதியில் இந்த அனைத்து கலகத்திற்கும் காரணம் யார், இந்த ரகசியங்களை வைத்து அந்த மர்ம நபர் என்ன செய்கிறார்? ஏன் செய்கிறார்? இதற்கும் கதாநாயகன் உதயநிதிக்கும் என்ன சம்மந்தம்? என்பதே படத்தின் மீதி கதை. எனலாம்.

படத்தை பற்றிய அலசல் 

தடம் தடையறைத் தாக்க போன்ற படங்களைப் போல இந்தப் படத்தையும் மகிழ்திருமேனி சூப்பராக இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாப்பாத்திரங்களை சிறப்பாக வடிவமைத்துள்ளார்.இப்படத்தில் கதாநாயகனாக நடித்த உதயநிதி ஸ்டாலின் வழமை போல சூப்பராக நடித்துள்ளார்.


அதே போல ஆரவ் ஒவ்வொருவரையும் தேடி தேடி கொடூரமாக வேட்டையாடும் கொடூரமானதாகவும் ஸ்மாட் வில்லனாகவும் நடித்துள்ளார். சில இடங்களில் மாத்திரம் வந்தாலும் தனது கதாப்பாத்திரத்தை சரியான முறையில் செய்துள்ளார். அதே போல முக்கிய வேடத்தில் தோன்றியுள்ள கலையரசனின் நடிப்பு ஓகே எனலாம்.

இடைவேளை காட்சி மாஸ்.ஆனாலும், இப்படம் சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது. எதிர்பார்ப்புக்கு நிகரான விறுவிறுப்பு சற்று குறைவு. திரைக்கதையில் சுவாரஸ்யத்தை அதிகரித்து இருக்கலாம். மகிழ் திருமேனியின் திரைக்கதை தானா இது என சந்தேகம் எழுகிறது.


ஆக்ஷன் காட்சிகள் பிரமாதம். அதே போல் இடைவேளை காட்சியின் வடிவமைப்பு சூப்பர்.ஸ்ரீகாந்த் தேவாவின் பாடல்கள் ஈர்க்கவில்லை. பின்னணி இசை படத்திற்கு மேலும் பலத்தை சேர்க்கிறது. இருப்பின் இப்படத்தை ஒரு முறை மட்டும் பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement