• Apr 24 2024

அச்சு அசல் விஜய்யைப் போலவே உள்ள இரண்டு நபர்கள்... புகைப்படத்தைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் வாயிலாக சினிமாவில் காலடி எடுத்து வைத்த இவர் நடிப்பில் ஏறத்தாள 65 இற்கும் அதிகமான படங்கள் உருவாகி விட்டன. 


இதனைத் தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். வம்சி இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு உருவான இப்படமானது வருகிற 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்போதிருந்தே இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் பலரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

வாரிசு படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' என்ற படத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. 


இந்நிலையில் தற்போது விஜய்யை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் இரு நபர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதில் ஒருவர் பார்ப்பதற்கு 90 காலகட்டத்தில் பார்த்த விஜய்யை போலவும், மற்றொருவர் மாஸ்டர் படத்தில் பார்த்த விஜய் மாதிரியும் தெரிகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்..!


Advertisement

Advertisement

Advertisement