வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற டிவி பிரபலம் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்

142

தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கொரோனாத் தொற்றினாலும் மாரடைப்பினாலும் இறப்புக்குள்ளாவது அனைவருக்கும் அதிர்ச்சியளித்து வருகின்றது. அந்த வகையில் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற டிவி பிரபலம் ஜக்னூர் அனேஜா மாரடைப்பால் மரணம் அடைந்தது அனைத்து திரையுலகினரையும் சோகத்தில் தள்ளியுள்ளது.

இந்நிலையில் எகிப்துக்கு சுற்றுலா சென்ற இவருக்கு வயது 40. ஃபிட்டாக இருந்த ஜக்னூர் திடீர் என்று இறந்த செய்தி அறிந்த குடும்பத்தார், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் ஜக்னூர் பற்றி அவரின் நண்பரான முகமது அல் மஹ்மூதி கூறியதாவது, கடந்த வாரம் தான் நண்பனை சந்தித்து பேசினேன். இந்தியாவுக்கு சென்ற பிறகு படங்களில் நடிக்கப் போகிறேன் என்றார்.

மேலும் அவர் சந்தோஷமாக இருந்தார். இந்நிலையில் அனேஜா இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை என்றார்.எம்.டி.வி.யின் லவ் ஸ்கூல் ரியாலிட்டி நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார் ஜக்னூர் அனேஜா. முதல் சீசனில் தன் அப்போதைய காதலியான மனிஷாவுடன் கலந்து கொண்டார்.

ஆனால் அந்த நிகழ்ச்சியிலேயே அவர்களின் காதல் முறிந்துவிட்டது. மனிஷாவை பிரிந்த பிறகு மோனிகாவை காதலித்தார். மோனிகாவுடன் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டார். ஆனால் அந்த காதலும் முறிந்துவிட்டது.சோட்டி சர்தார்னி ஹிந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் மஹிர் பந்தி என்பவரும், ஜக்னூர் அனேஜாவுக்கு நெருக்கமானவர். ஜக்னூருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இவரும் கூறியதாவது, உங்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். மிஸ் பண்ணுகிறேன் சகோதரா. அடுத்த பக்கத்தில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.