• Apr 25 2024

தொழில் அதிபராகும் TTF வாசன்- முதல் முதலாக ஆரம்பிக்கவுள்ள கடை என்ன தெரியுமா?- பூஜையும் போட்டாச்சு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தனது யூடியூப் பக்கத்தில் விலை உயர்ந்த பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யும் வீடியோக்களைப் பகிர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் தான் யூடியூப் பிரபலம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் TTF வாசன். இவரைப் போல பைக்கில் பயணம் செய்ய விரும்பும் பலரும் இவரை பின்பற்றி வருகின்றனர்.

இவருக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் சமூக வலைத்தளங்களில் உள்ளனர். அண்மைக்காலமாக  டிடிஎஃப் வாசன் 2k கிட்ஸ்களின் பேராதரவுடன் ட்ரெண்ட் ஆகி வருகிறார்.ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் TTF வாசன்,  சில வழக்குகளில் சிக்கி இருந்தார். 


இருப்பினும் தற்போது பைக்குகளில் பயணம் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.சமீபத்தில் வாசன், தனது முதுகில்  ரசிகர்களின் முகங்களை பச்சைக்குத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின. ரசிகர்களின் முகத்தை ஒரே அமர்வில் பச்சை குத்த 27 மணி நேரம் 24 நிமிடங்கள் ஆனதாக வாசன் கூறியிருந்தார். 


இதனை பாராட்டி கலாம் உலக சாதனை நிறுவனம் பாராட்டி உலகசாதனை சான்றிதழ் வழங்கியுள்ளது.இந்நிலையில் வாசன்,  TTF Pit Shop என்ற பெயரில் பைக் ரைடு செய்யும் நபர்களுக்கு தேவையான உபகரணங்களை விற்கும் கடையை திறக்க உள்ளார். இதற்காக கடையை தேர்ந்தெடுத்து உள் அலங்காரம் செய்வதற்கு பூஜையும் போட்டுள்ளார்.

இதற்காக 10 லட்ச ரூபாயை செலவழித்து உள்ளதாக வாசன் கூறியுள்ளார். TTF   கல்யாண மண்டபம், TTF ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் திறக்க வேண்டும் என்று தனது ஆசையையும் வாசன் வெளிப்படுத்தியுள்ளார். இன்னும் 99 கடைகளை திறக்க வேண்டும் என்றும் வாசன் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement