• Apr 24 2024

திரிஷாவின் உதட்டில் முத்தமிட்ட குழந்தை... உங்களை மணக்க ஒரு மணாளன் பிறந்து விட்டான் போல... வைச்சு செய்யும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழ்ந்து வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் உருவான படங்களோ ஏராளம். அதில் அதிகளவான படங்கள் வெற்றிப் படங்களாகவே உள்ளன. இவர் விஜய், அஜித் ஜெயம் ரவி, சூர்யா எனப் பல முன்னணி நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கின்றார். 

இந்நிலையில் இவரின் நடிப்பில் அண்மையில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த குந்தவை என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.


இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் 'தளபதி 67' படத்தில் கதாநாயகியாக திரிஷா தான் நடிக்கவுள்ளார் என கூறப்பட்டு வருகின்றது. ஆனால் இதுவரை இப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.


எது எவ்வாறாயினும் 40 வயதிலும் ஒரு நடிகை கதாநாயகியாக நடித்து வருகின்றார் என்றால் அது நம்ம திரிஷா தான். சினிமாவில் நுழைந்த நாள் முதல் இன்றுவரை ஹீரோயின் ஆகவே நடித்து அசத்தி வருகின்றார். ஆனால் 40 வயதாகியும் திரிஷா இன்றுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.


இந்நிலையில் திரிஷாவின் பேனர் புகைப்படத்தை பார்த்து விட்டு அன்போடு குழந்தை ஒன்று முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை திரிஷா கண்ணீர் எமோஜியுடன் எமோஷனலாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் இதனைப் பார்த்த ஒரு சில ரசிகர்களோ "உங்களை மணக்க ஒரு மணாளன் பிறந்து விட்டான்" எனக் கூறி கிண்டலாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement