• Apr 18 2024

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியாகிய த்ரிஷாவின் ட்ரெஸ் மேக்கிங் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


 மன்னன் ராஜ ராஜ சோழனை பற்றி, கல்கி புனையப்பட்ட நாவலாக எழுதிய 'பொன்னியின் செல்வன்' கதையை தழுவி இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படம் வசூலிலும் 500 கோடிக்கு மேல் பெற்றது.இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதனால் படக்குழு ப்ரமோஷன் வேலைகளில் வேகமாக ஈடுபட்டு வருகின்றனர்.


இப்படத்தில் நடித்த ஜெயம் ரவி, ஜெயராம், கார்த்தி, விக்ரம், படப்பிடிப்பின் போது பேசிய மேக்கிங் வீடியோ ஒன்று அண்மையில் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து படம் வெளியாக இன்னும் 50 நாட்களே இருப்பதாகவும் கூறி வெளியாகியது.

இதனை அடுத்து தற்பொழுது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் குந்தவையாக நடித்த த்ரிஷாவின் ட்ரெஸ் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் இப்படத்தின் பெஸ்ட் சிங்கிள் வெகு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement