• Mar 19 2024

தனுஷ் படத்தில் கதாநாயகியாக இணையும் த்ரிஷா?.. வெளியான சூப்பர் அப்டேட்..உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

 நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். படத்தின் சூட்டிங் தற்போது மதுரையில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கவுள்ள டி50 படத்தின் சூட்டிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்துள்ள நிலையில், தற்போது மதுரையில் நடந்து வருகிறது. மதுரையில் ஜாக்கிங் செல்லும் தனுஷின் வீடியோவும் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

இந்தப் படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் கமிட்டாகியுள்ளார் தனுஷ். அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டி50 படத்தை இயக்கவுள்ளார். ப பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ளது டி50 படம். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தப் படம் குறித்த அப்டேட்களை தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன.

இதனிடையே இந்தப்படம் மிகவும் அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷ் இயக்கத்தில் த்ரிஷா இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. வடசென்னை போன்று கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள டி50 படத்திற்கான லொகேஷன்களை பார்க்கும் வேலைகளையும் படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் த்ரிஷா இணையவுள்ளது அவரது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களின் 50வது படத்தில் த்ரிஷா இணைந்துள்ளார். முன்னதாக அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்தில் த்ரிஷா ஜோடியாக நடித்த நிலையில், தற்போது தனுஷின் 50வது படத்திலும் அவர் இணையவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement