• Apr 18 2024

நயன்தாரா கணவருடன் கைகோர்த்த த்ரிஷா- விஜய்யை அடுத்து அஜித்துக்கும் ஜோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் தற்பொழுது துணிவு என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் எச.வினோத் இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படமாகும். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது.

இப்படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சுவாரியார் நடித்து வருகின்றார்.இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.


இதனை அடுத்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல 62 படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூ மாதத்துக்குள் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிப்பார் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது திரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே த்ரிஷா விஜய் 67 படத்திலும் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement