• Mar 26 2023

விலையுயர்ந்த காரை வாங்கிய திருச்சி சரவணகுமார்..! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Jo / 6 days ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிகராக பிரபலமானவர் திருச்சி சரவணகுமார்.

இவர் மெமிக்ரி கலைஞராகவும் புகழ் பெற்றவர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இவர், காந்தி கணக்கு (2013) திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  பல தொலைக்காட்சி சேனல்களிலும் மேடை நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார். பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியுள்ளார்.

சன் டிவியில் 2011-ல் அசத்த போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார்.  ஆதித்யா காமெடி சேனலில் வி.ஜே.வாகவும் பணியாற்றியுள்ளார்.  கலைஞர் டிவி -  மக்கள் டிவி ஆகியவற்றிலும் பணிபுரிந்தவர்.  டப்பிங் கலைஞராக பல்வேறு கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்தவர் தான் சரவணகுமார்.

ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் புகழ் பெற்ற இயக்குனர்களான ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் Farzi தொடர் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில்  பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் TSK தமது குடும்பத்துடன் சென்று புதிய விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார். மகேந்திரா நிறுவனத்தின் விலையுயர்ந்த XUV 700 ரக காரை வாங்கியுள்ளார். இதன் விலை 13.45 லட்சம் ரூபாய் முதல் 25.48 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. 1999 முதல் 2198 சிசி இன்ஜின் கொள்ளளவு கொண்டது. டீசல் மற்றும் பெட்ரோல் என இரண்டு வகைகளிலும் இந்த கார் கிடைக்கிறது.  5 - 7 பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதி கொண்டது. இந்த கார் 15-17 கிமீ மைலேஜ் தரவல்லது.


Advertisement

Advertisement

Advertisement