• Mar 29 2024

இரவு பார்ட்டியில் கமல் மற்றும் ராதிகாவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட விஜய்- ட்ரெண்டாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

வாரிசு படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடிக்கிறார். 

இதில் ஹீரோயினாக திரிஷா நடிக்க வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் மேனன் மற்றும் நடிகர் அர்ஜுன் ஆகியோர் நடிக்கின்றனர். இதுதவிர நடிகை பிரியா ஆனந்த், நடிகர்கள் மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.


இப்படம் குறித்த அப்டேட்டுக்களும் அடிக்கடி வெளியாவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.இப்படத்தின் இயக்குநரான லேகேஷ் இதற்கு முதல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தினை இயக்கியிருந்தார்.இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது.

எனவே இவ் வெற்றியைக் கொண்டாடும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முதல் கமல்ஹாசன் ஒரு பார்ட்டி வைத்திருந்தார். இந்த இரவுப் பார்ட்டியில் திரைலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் குறிப்பாக நடிகர் விஜய்யும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதோடு நடனமும் ஆடி இருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதையும் காணலாம்.




Advertisement

Advertisement

Advertisement