• May 29 2023

இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் கலக்கும் டாப் 10 சீரியல்கள்..! முதலிடத்தில் எந்த சீரியல் தெரியுமா?

Jo / 3 weeks ago

Advertisement

Listen News!

சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியலை தினமும்  விரும்பிப் பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. 

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 10-வது இடத்தில் சன் டிவியின் ஆனந்த ராகம் சீரியலும், 9-வது இடத்தில் விஜய் டிவியின் புத்தம் புது சீரியல் ஆன சிறகடிக்க ஆசை சீரியலும், 8-வது இடத்தில் கூட்டுக்குடும்பம் மகத்துவத்தை சின்னத்திரை ரசிகர்களுக்கு எடுத்துரைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், 7-வது இடத்தில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இருக்கிறது. ஆனால் இந்த சீரியல் ஒரு காலத்தில் டாப் ஐந்து இடத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது சன் டிவியின் புத்தம் புது சீரியல்களின் வருகையால் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து 6-வது இடத்தில் சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியல் பிடித்துள்ளது. இந்த சீரியலின் கதாநாயகி ஷபானாவை பார்ப்பதற்காகவே இளசுகளும் இந்த சீரியலை அனுதினமும் பார்க்கின்றனர், அதுமட்டுமல்ல இந்த சீரியல் துவங்கப்பட்ட சில வாரங்களிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டது.

மேலும் 5-வது இடம் இனியா சீரியலுக்கும், 4-வது இடம் அதிரடி சுவாரசியமான கதைக்களத்தை கொண்ட எதிர்நீச்சல் சீரியலுக்கும் கிடைத்துள்ளது. மேலும் எதிர்நீச்சல் சீரியல்தான் தற்போது சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரிட் சீரியலாகவே இருக்கிறது. இதில் ஒவ்வொரு நாளும் புது புது திருப்பங்களை நிகழ்த்தி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிறது.அதைப்போல் 3-வது இடம் இரண்டு மனைவியை இந்த காலத்தில் திருமணம் செய்து கொண்டால் என்ன நிகழும் என்பதை காட்டும் விதமாக தரமான சம்பவங்களை செய்யும் சுந்தரிக்கு கிடைத்துள்ளது. மேலும் அண்ணன் தங்கையின் பாச கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் வானத்தைப்போல சீரியலுக்கு 2-வது இடமும், தோழியே மனைவியாக கிடைத்தால் அது எவ்வளவு பெரிய வரம் என்பதை காட்டும் கயல் சீரியல் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இவ்வாறு இந்த 10 சீரியல்கள் தான் இந்த வார டிஆர்பி-யில் முதல் 10 இடங்களைப் பிடித்த சீரியல்களாகும். அதிலும் டாப் 5 லிஸ்டில் சன் டிவியின் கயல், வானத்தைப்போல, சுந்தரி, எதிர்நீச்சல், இனியா போன்ற ஒரே சேனல்களை சேர்ந்த 5 சீரியல்களும் ஆக்கிரமிப்பதால் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சேனல்கள் திணறுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement