• Mar 25 2023

ஈஸ்வரிக்குத் தெரிய வந்த உண்மை.. பயத்தில் முழிக்கும் பாக்கியா.. அதிர்ச்சியில் கோபி.. 'பாக்கியலட்சுமி' இன்றைய ப்ரோமோ.!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கான்டீன் திறப்பு விழாவிற்கு பாக்கியாவுடன் இங்கிலீஸ் கிளாசில் படிக்கும் எல்லோரும் வருகை தருகின்றனர்.


அங்கு வந்த பழனி பாக்கியாவிற்கு கை கொடுத்துவிட்டு "நீங்க லட்சணமா இருக்கிறீங்க உங்களுக்கு 30 வயசு இருக்குமா" என்று கேட்க அங்கு வரும் கோபி அதிர்ச்சியடைகின்றார்.


பின்பு அங்கு வந்த ஈஸ்வரி பாக்கியாவிடம் யார் இவங்க எனக் கேட்கின்றார். அதன் மூலமாக பாக்கியா இங்கிலீஸ் கிளாஸ் போற விஷயம் ஈஸ்வரிக்குத் தெரிய வருகின்றது. பின்னர் ஈஸ்வரி கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி செல்கின்றார். 

இதனால் பாக்கியா பயத்தில் விறைத்துப் போய் நிற்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement