• Apr 20 2024

பிக்பாஸ் கேட்டை திறங்க, அசீமுக்கு வெளில போகணுமாம்- வீட்டுக்குள்ள வந்ததுமே அட்ராசிட்ரியை ஆரம்பித்த தனலக்ஷ்மி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோளாறு, GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர். உள்ளே வந்த உடனேயே அசல் - ADK இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பின்னர் ஷிவின் விக்ரமனிடம் பேசிய விதம் பற்றியும் அசல் விமர்சித்திருந்தார். 

அசல் தன்னிடம் பேச பிடிக்கவில்லை என சொல்லியதை கேட்டு கண்கலங்கிய ADK வை சக போட்டியாளர்கள் சமாதானம் செய்தனர்.இருந்தாலும் ஜி.பி முத்துவின் குறும்புத்தனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இனிமேல் யாரெல்லாம் வருவாங்க என ஹவுஸ்மேட்ஸ் ஆர்வமாக உள்ளனர்.


இந்நிலையில், பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார் தனலட்சுமி. சர்ப்ரைஸாக வீட்டுக்குள் வந்த தனாவிடம் போட்டியாளர்கள் அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் மக்களிடம் கிடைத்த வரவேற்பு பற்றி தனா போட்டியாளர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறார். இதனிடையே அங்குவரும் அசீம், "வெளியில ரீச் எப்படி இருக்கு?" என தனாவிடம் கேட்கிறார்.

அப்போது வாங்க என்று அசீமின் கைபிடித்து கேட் அருகே அழைத்துச் சென்று,"பிக்பாஸ் கேட்டை திறங்க, அசீமுக்கு வெளியே ரீச் எப்படி இருக்குனு பாக்கணுமாம்" என தனா சொல்ல, அசீம் அங்கிருந்து சிரித்தபடியே திரும்பிச் செல்கிறார். அப்போது பிக்பாஸ் "தனா, குட் ஒன்" எனச் சொல்ல வீட்டில் இருந்த அனைவரும் சிரித்துவிடுகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement