• Dec 07 2022

துணிவு திரைப்படத்தில் இருந்து வெளியாகவுள்ள மாஸ்ஸான மூன்று பாடல்கள் - வெளியானது சூப்பர் தகவல்..!

Listen News!
Aishu / 1 week ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூலிலும் அள்ளிக் குவித்திருக்கின்றது. 

தற்போது இவர் நடிப்பில் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு.

இப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

மேலும் இப்படத்தின் போஸ்டர்கள் தவிர இப்படத்தில் இருந்து புதிதாக எதுவும் வெளியாகவில்லை, இதனால் ரசிகர்கள் இப்படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மூன்று பாடல்கள் குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டர் என மூன்று பாடல்களின் பெயர்கள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.