• May 29 2023

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் இணையும் மூன்று கதாநாயகிகள்- பாலிவுட் நடிகைகளா? அப்போ நயன்தாரா கிடையாதா?

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் அடுத்ததாக இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்திற்கு விடா முயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.இதனால் ரசிகர்கள் பலரும் இப்படத்தை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தில் ஹீரோயினாக நடிக்க மீண்டும் 3 பாலிவுட் ஹீரோயின்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். 3  விடாமுயற்சி படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட நிலையிலும், இன்னமும் அந்த படத்தின் ஹீரோயின் முடிவாகவில்லை என்கின்றனர்.


பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான கத்ரீனா கைஃப், கரீனா கபூர் மற்றும் கங்கனா ரனாவத் உள்ளிட்ட நடிகைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் ஷூட்டிங் செல்வதற்கு முன்னதாக இந்த மாத இறுதிக்குள் ஹீரோயினை இயக்குநர் மகிழ் திருமேனி ஃபைனல் செய்து விடுவார் என்கின்றனர். 


நடிகை கங்கனா ரனாவத் தமிழில் தலைவி, சந்திரமுகி 2 என தொடர்ந்து நடித்து வரும் நிலையில், அதிகபட்சமாக கங்கனா ரனாவத் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், விஜய்சேதுபதியுடன் இணைந்து நடித்த கத்ரீனா கைஃப் கூட இந்த ரேஸில் உள்ளார் என்கின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement