• Dec 04 2023

இந்த முறை அசீம் கண்டிப்பா போய்டுவான் சந்தோசமாக இருக்கலாம்- திமிர் பிடிச்சு ஆடும் மைனா நந்தினி மற்றும் மகேஷ்வரி

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6.இந்த நிகழ்ச்சியானது தற்பொழுது விறுவிறுப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் அசீம் தனலக்ஷ்மியைத் திட்டியதால் கமல்ஹாசன் அசீமைத் திட்டித் தீர்த்து இருந்தார்.

இதனால் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வாரம் அசீமைத் தாக்கி பேசிக் கொண்டே இருக்கின்றனர்.அதிலும் மைனா நந்தினியும் மகேஸ்வரியும் அசீமுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக நேற்றைய தினம் விக்ரமன் டீமுக்கு ஆதரவாக அசீம் பேசியதாகக் கூறி அசீமைத் திட்டித் தீர்த்து வந்தனர்.


இந்த நிலையில் மைனா நந்தினியும் மகேஷ்வரியும் பேசிக் கொண்டு இருக்கும் போது மகேஷ்வரி இந்த முறை கண்டிப்பா அசீம் வெளியில போய்டுவான். சந்தோசமாக இருக்கலாம் எனக் கூறுகின்றார்


இவர்களைப் போல ஷெரின் குயின்சியிடம் நான் தான் இந்த முறை வெளியில் போவேன் என்று கூறுகின்றார். அதற்கு குயின்சி கண்டிப்பா அசீம் தான் வெளியில போவாங்க. அவங்க தான் நிறைய தப்பு பண்ணியிருக்கிறாங்க அவங்க தான் போவாங்க என்றும் கூறியதைக் காணலாம்

Advertisement

Advertisement

Advertisement