• Apr 18 2024

அடடே இந்த குட்டிக் குழந்தை நடிகர் ஜெயம் ரவியா?-இந்த சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் ஜெயம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இப்படத்தில் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெயம் ரவிக்கு மக்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர்.இதை தொடர்ந்து அடுத்ததாக அகிலன், சைரன், இறைவன் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.


இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

மேலும் இவர் ஆர்த்தி என்பவரைத் திருமணம் செய்திருப்பதோடு இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் இவர் நடிப்பில் வெளியான டிக்டிக்டிக் படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement