• Apr 19 2024

ஹிட் படங்களை கொடுத்தும் இவர்களுக்கு இந்த நிலைமையா..? சினிமாவை விட்டு ஓடிப்போன இயக்குநர்கள்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் சில இயக்குநர்கள் மட்டுமே காலாகாலமாக தாக்கு பிடிப்பார்கள். 35,45 வருடங்கள் எல்லாம் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கிய இயக்குநர்கள் இருக்கிறார்கள். ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, கே.விஸ்வநாத் என மிகவும் சிலரே அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள். 


சில இயக்குநர்கள் பத்து, பதினைந்து வருடங்கள் தாக்குபிடிப்பார்கள். சில இயக்குநர்கள் ஒரே படத்தோடே காணாமல் போய்விடுவார்கள். சில இயக்குநர்கள் கவனிக்கத்தக்க சில சிறப்பான திரைப்படங்களை இயக்குவார்கள். அவர்களின் திரைப்படங்களுக்கு என தனி ரசிகர்களே இருப்பார்கள். 


ஆனால், அதன்பின் அவரின் இயக்கத்தில் வரும் திரைப்படங்கள் கவனத்தை பெறாது அல்லது படங்களை இயக்குவதையே அவர்கள் நிறுத்திவிடுவார்கள். அப்படிப்பட்ட சில நான்கு இயக்குநர்கள் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.


பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் உதவியாளரான பாலாஜி சக்திவேல் இயக்கிய முதல் திரைப்படமான சாமுராய் தோல்வியை தழுவியது. ஆனால், ‘காதல்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். அடுத்து இயக்கிய கல்லூரி திரைப்படம் தோல்வி அடைந்தது. ஆனால், ‘வழக்கு எண் 18/9’ வெற்றியடைந்தது.


அதன் பின் நடிகராக மாறி அசுரன், மகான், பொன்னியின் செல்வன், சர்தார், காரி ஆகிய படங்களில் நடித்தார். இவரின் இயக்கத்தில் எப்போது படம் வெளியாகும் என நல்ல சினிமாவை விரும்பும் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.


வசந்த பாலனும் ஷங்கரின் உதவியாளர்தான். இவர் இயக்கிய முதல் திரைப்படம் ஆல்பம். இப்படம் வரவேற்பை பெறவில்லை. அதன்பின் 4 வருடங்கள் கழித்து ‘வெயில்’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தார். இப்படம் சில விருதுகளையும் பெற்றது. அதேபோல், அங்காடித்தெரு திரைப்படமும் சிறந்த திரைப்படமாக விருதுகளை பெற்றது. ஆனால், அடுத்து அவர் இயக்கிய படங்கள் ரசிகர்களை கவரவில்லை. 


எஸ்.ஜே.சூர்யா அஜித்தை வைத்து இவர் இயக்கிய முதல் திரைப்படமான ‘வாலி’ சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. பாக்கியராஜ் போல் தான் இயக்கும் படங்களில் கிளுகிளுப்பான வசனம் மற்றும் காட்சிகளை வைப்பது இவரின் வழக்கம். 


அடுத்து விஜய் ஜோதிகாவை வைத்து அவர் இயக்கிய குஷி திரைப்படமும் சூப்பர் ஹிட். அதன்பின் அவர் இயக்கும் படங்களில் அவரே நடிக்க துவங்கினார். அங்குதான் அவரின் சறுக்கல் துவங்கியது. ஆனால், அப்படங்கள் ஓடவில்லை. அதன்பின் நடிகராக மாறினார். தற்போது வில்லனாக பல படங்களில் கலக்கி வருகிறார். 


கார்த்திக் சுப்பாராஜ் ஐ.டி துறை வேலையை விட்டு குறும்படங்களை இயக்கியவர். பீட்சா திரைப்படம் மூலம் கவனிக்க வைத்தவர். அடுத்து அவர் இயக்கிய ஜிகர்தண்டா திரைப்படம் மூலம் முழுமையான இயக்குநராக மாறினார். இப்படம் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால், அதன்பின் அவர் இயக்கிய இறைவி, ஜகமே தந்திரம், மெர்குரி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை. 


Advertisement

Advertisement

Advertisement