• Apr 23 2024

'கிரே மேன்' ஹாலிவுட் படத்தில் தனுஷ் ரோல் இதுதான்..வெளியான சூப்பர் தகவல்…!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

துள்ளுவதோ இளமை எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய தனுஷ் தற்போது பாலிவுட் ஹாலிவுட் என கலக்கி வருகின்றார்.இவர் ஒரு நடிகர் மட்டுமல்லாது இயக்குநர் ,தயாரிப்பாளர், பாடகர் ,பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

முதல் படத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்த தனுஷ் அதைப்பற்றி கவலைப்படாது நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தார். எனினும் அதன் பலனாக காதல் கொண்டேன், திருடா திருடி, தேவதையை கண்டேன், பொல்லாதவன், படிக்காதவன், ஆடுகளம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உச்சத்தை தொட்டுள்ளார்.

இது தவிர தற்பொழுது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களில் நடித்து வருகின்றார்.

சில தினங்கள் முன்பு தான் தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான கிரே மேன் ட்ரைலர் வெளியாகி இருந்தது. அதில் தனுஷ் முகம் சில நொடிகள் மட்டுமே காட்டப்பட்டு இருந்தது. அதனால் தனுஷ் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் இயக்குநர்கள் ரஸ்ஸோ பிரதர்ஸ் அளித்திருக்கும் பேட்டியில் தனுஷ் ரோல் பற்றி பேசி இருக்கின்றனர்.

மேலும் தனுஷ் இந்த படத்தில் கொலையாளியாக நடிக்கின்றார். அவருக்கு நல்ல நடிப்பு திறமை இருக்கிறது. அவருக்காகவே இந்த ரோல் உருவாக்கினோம்.

அத்தோடு இரண்டு பெரிய சண்டை காட்சிகள் அவருக்கு இருக்கிறது என தெரிவித்து உள்ளனர்.தனுஷ் கதாபாத்திரம் நெகடிவ் ஆனது என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

https://www.youtube.com/embed/NrGhWG5Emwc


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement

Advertisement